ஜீவாதிபதி ஜோதியே
Christian Song Lyrics
TamilJeevaathipathi, jothiyae,
Paktharin inpa Yesuvae
Lokin maa inpam rusiththum
Sernthom um paathamae meenndum
Paatham sernthorai meetparae
Ivvunnmai entum maaraathae
Thaeduvorkku neer nallavar
Pattaுvorkku sampooranar
Vinn appam ummil rusippom
Muttaுm utkolla aasippom
Neer jeeva oottaு ummilae
Ullaththin thaakam theerumae
Maaridum vaalkkai yaavilum
Em aathmaa ummai vaanjikkum
Um arut paarvai inpamae
Visuvaasipporukku paakkiyamae
Thangum emmodu, Yesuvae
Ekkaalum aattith thaettaுmae
Kaarirul paavam ottumae
Um thooya jothi veesumae
ஜீவாதிபதி, ஜோதியே,
பக்தரின் இன்ப இயேசுவே
லோகின் மா இன்பம் ருசித்தும்
சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும்
பாதம் சேர்ந்தோரை மீட்பரே
இவ்வுண்மை என்றும் மாறாதே
தேடுவோர்க்கு நீர் நல்லவர்
பற்றுவோர்க்கு சம்பூரணர்
விண் அப்பம் உம்மில் ருசிப்போம்
முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்
நீர் ஜீவ ஊற்று உம்மிலே
உள்ளத்தின் தாகம் தீருமே
மாறிடும் வாழ்க்கை யாவிலும்
எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்
உம் அருட் பார்வை இன்பமே
விசுவாசிப்போருக்கு பாக்கியமே
தங்கும் எம்மோடு, இயேசுவே
எக்காலும் ஆற்றித் தேற்றுமே
காரிருள் பாவம் ஓட்டுமே
உம் தூய ஜோதி வீசுமே