அமலா தயாபரா
Christian Song Lyrics
TamilAmalaa thayaaparaa arulkoor aiyaa kuruparaa
Pallavi
Amalaa, thayaaparaa, arulkoor, aiyaa, kuruparaa
Saranangal
1. Samayam eeraaror aaraு saasthirangal vaetha naankum
Amaiyum thaththuvam thonnnnoottaாraுm aaraுngadantha – amalaa
2. Antham ati nadu illaatha narparan aathi,
Suntharam mikum atheetha sothiprakaasa neethi – amalaa
3. Njaanath raviya vaetha nanmaip parama potha,
Vaanath thaevap rasaatha makimaik kalavillaatha – amalaa
4. Kaanappadaa aroopa, karunnaich suya soroopa,
Thonappadaa viyaapa, sukirthath thiruth thayaapa -amalaa
5. Sathya vasana naeyaa, samastha punnya sakaaya,
Karththa thaththuva upaayaa, karunnai poliyum vaayaa – amalaa
6. Ellai illaa meynj njaana aeka para vasthaana
Sol arithaam nithaana, thullipath thontam maelaana – amalaa
7. Karunnaakaraa, upa kaaraa, niraakaraa,
Paramaesuraa, kirupaakaraa, sarvaesuraa – amalaa
அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபரா
பல்லவி
அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபரா
சரணங்கள்
1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற்றாறும் ஆறுங்கடந்த – அமலா
2. அந்தம் அடி நடு இல்லாத நற்பரன் ஆதி,
சுந்தரம் மிகும் அதீத சோதிப்ரகாச நீதி – அமலா
3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,
வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத – அமலா
4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,
தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப -அமலா
5. சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாய,
கர்த்த தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா – அமலா
6. எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான
சொல் அரிதாம் நிதான, துல்லிபத் தொன்றாம் மேலான – அமலா
7. கருணாகரா, உப காரா, நிராகரா,
பரமேசுரா, கிருபாகரா, சர்வேசுரா – அமலா