அரணே என் கோட்டையே
Christian Song Lyrics
TamilArannee en kottaைyae
Pelanae en thanjamae
Enthan ninaivaay iruppavarae
Kannnnin mannipol kaappavarae
Iravum pakalum ovvoru naalum
Imaippoluthum urangaamalum
Um sirakin nilalil neer maraiththu vaiththeer
Um anpinaal ennai iluththukkonnteer
Eththanai nanmai en vaalvilae
Ennnnillaa kirupai enakkaakavae
Um vaakkai nampiyae nampikkai perukuthae
Um anpai ennnniyae ennullam paaduthae
Neerinti enakkaethu aaraுthalae
Neer pothum enakkentum aananthamae
Ekkaala saththam vaanil thonikkum
En meetparai en kannkal kaanum
Annaalai Nnokkiyae thalaraamal oduvaen
Anparai kaanavae anuthinamum naaduvaen
Avar illaththil naan ilaippaaraுvaen
Neetiththa naatkalaay nilaiththiruppaen
அரணே என் கோட்டையே
பெலனே என் தஞ்சமே
எந்தன் நினைவாய் இருப்பவரே
கண்ணின் மணிபோல் காப்பவரே
இரவும் பகலும் ஒவ்வொரு நாளும்
இமைப்பொழுதும் உறங்காமலும்
உம் சிறகின் நிழலில் நீர் மறைத்து வைத்தீர்
உம் அன்பினால் என்னை இழுத்துக்கொண்டீர்
எத்தனை நன்மை என் வாழ்விலே
எண்ணில்லா கிருபை எனக்காகவே
உம் வாக்கை நம்பியே நம்பிக்கை பெருகுதே
உம் அன்பை எண்ணியே என்னுள்ளம் பாடுதே
நீரின்றி எனக்கேது ஆறுதலே
நீர் போதும் எனக்கென்றும் ஆனந்தமே
எக்காள சத்தம் வானில் தொனிக்கும்
என் மீட்பரை என் கண்கள் காணும்
அந்நாளை நோக்கியே தளராமல் ஓடுவேன்
அன்பரை காணவே அனுதினமும் நாடுவேன்
அவர் இல்லத்தில் நான் இளைப்பாறுவேன்
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்