ஆ இன்ப சபையே!
Christian Song Lyrics
TamilAa inpa Sabaiyae!
Nee entum thalaiththu vaalka;
Anpudan paalar yaavarum angu aikkiyamaay onga;
Annai thanthai aavalaay paalakarai
Aanndavan paatham pataikka.
2. Aa inpa Sabaiyae!
Un selvam sukam thalaikka;
Un makkal yaavarum or vaelai ukanthu seyya;
Pakthiyudan parpala sevai aatti,
Karththan arul pettaு onga.
3. Aa inpa Sabaiyae!
Nanmai perukum annaalil
Aanndavar naamaththai aarva nantiyudan pottaு;
Thunpam thukkam thuyaram thodar naalil
Antum avaraik konndaadu.
4. Aa inpa Sabaiyae!
Un unnmai nannpar kiristhaesu;
Anpar avar pirasannam unnai entum nadaththum;
Ivvaalvinpin un makkalai avarae
Vinnnnodu serththuk kaappaarae.
ஆ இன்ப சபையே!
நீ என்றும் தழைத்து வாழ்க;
அன்புடன் பாலர் யாவரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க;
அன்னை தந்தை ஆவலாய் பாலகரை
ஆண்டவன் பாதம் படைக்க.
2. ஆ இன்ப சபையே!
உன் செல்வம் சுகம் தழைக்க;
உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய;
பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி,
கர்த்தன் அருள் பெற்று ஓங்க.
3. ஆ இன்ப சபையே!
நன்மை பெருகும் அந்நாளில்
ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று;
துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில்
அன்றும் அவரைக் கொண்டாடு.
4. ஆ இன்ப சபையே!
உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு;
அன்பர் அவர் பிரசன்னம் உன்னை என்றும் நடத்தும்;
இவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே
விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.