ஆர் இவர் ஆராரோ இந்த
Christian Song Lyrics
TamilAar ivar aaraaro – intha
Avaniyor maathidamae
Aanatai kutilitai monamay uthiththa
Ivvarputha paalakanaar?
1. Paaruruvaaku munnae – iruntha
Param porul thaanivaro?
Seerudan puvi, vaan, avai
Porul yaavaiyunj siruttiththa
Maavalaro!
2. Maesiyaa ivarthaano? – nammai -
Maey ththidum nararkono?
Aasaiyaay manitharukkaay
Mariththidum athi anpulla
Manasaano?
3. Thiththikkun theenganiyo? – namathu -
Thaevanin kannmanniyo?
Meththavae ulakirul neekkidum
Athisayamaeviya vinnnnoliyo!
4. Pattaththuth thuraimakano? -
Nammaip pannpudan
Aalpavano?
Kattalai meeridum yaavarkkum
Mannippuk kaatdidun
Thaayakano?
5. Jeevanin appamothaan? – thaakam
- theerththidum paanamothaan?
Aavalaay aelaikal atainthidum
Ataikkala maanavar ivar
Thaano?
ஆர் இவர் ஆராரோ – இந்த
அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமய் உதித்த
இவ்வற்புத பாலகனார்?
1. பாருருவாகு முன்னே – இருந்த
பரம் பொருள் தானிவரோ?
சீருடன் புவி, வான், அவை
பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ!
2. மேசியா இவர்தானோ? – நம்மை -
மேய் த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய்
மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ?
3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது -
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசயமேவிய விண்ணொளியோ!
4. பட்டத்துத் துரைமகனோ? -
நம்மைப் பண்புடன்
ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ?
5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
- தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவர் இவர்
தானோ?