வழி செய்வார்
Christian Song Lyrics
TamilVali seyvaar
Varunthi alaipporai kaividaathavar
Valuvaamal anpodu kaakkintavar
Vali seyvaar
Sothanai ennai sorvaakkinaalum
Sornthitaen enthan naathar unndu
Vaethanai thunpam thollai
Vaattinum enthan meetpar unndu
Maayaiyaana intha ulakilae
Maayamillaa anpu thaangumae
Maarpinilae annaiththuk kollumae
Maaridaamal nammotirukkumae
Nampinor aemaattinaalum
Nannpanaay enthan Karththar unndu
Ulakamae ennai ethirththaalum
Ulakaththai ventavar ennodunndu
Tholvikalai jeyamaakkuvaar
Tholodu tholaay iruppaar
Tholin maelae ennai sumappaar
Tholan enthan Yesu raajanae
Yesuvae en thanthaiyae
Yesuvae en thanjamae
Yesuvae en aaraுthalae
Yesuvae en aatharavae
வழி செய்வார்
வருந்தி அழைப்போரை கைவிடாதவர்
வழுவாமல் அன்போடு காக்கின்றவர்
வழி செய்வார்
சோதனை என்னை சோர்வாக்கினாலும்
சோர்ந்திடேன் எந்தன் நாதர் உண்டு
வேதனை துன்பம் தொல்லை
வாட்டினும் எந்தன் மீட்பர் உண்டு
மாயையான இந்த உலகிலே
மாயமில்லா அன்பு தாங்குமே
மார்பினிலே அணைத்துக் கொள்ளுமே
மாறிடாமல் நம்மோடிருக்குமே
நம்பினோர் ஏமாற்றினாலும்
நண்பனாய் எந்தன் கர்த்தர் உண்டு
உலகமே என்னை எதிர்த்தாலும்
உலகத்தை வென்றவர் என்னோடுண்டு
தோல்விகளை ஜெயமாக்குவார்
தோளோடு தோளாய் இருப்பார்
தோளின் மேலே என்னை சுமப்பார்
தோழன் எந்தன் இயேசு ராஜனே
இயேசுவே என் தந்தையே
இயேசுவே என் தஞ்சமே
இயேசுவே என் ஆறுதலே
இயேசுவே என் ஆதரவே