கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்
Christian Song Lyrics
TamilKempeeramaakavae sangaீtham paaduvom
Nampaaramae ennaalum neekku vonai naaduvom
Mangaatha theepamaay vilangum maa vasanamae
Singaaramaa yiththeepam naatich sernthathinamae
Padaamutik kotooranaip pathaikkavae kola
Kudaaramaaka veythathaeva vaethamae vela
Ekkaalamae thoniththidap pollaap purivila
Mukkaalamum thiriyaekarai muthanmaiyaayth thola
Jeevaathipar kelaa makathvamae siranthidath
Thaevaathi Dhevan yaesuven raெlaamarinthida
Akorappaey nadungiyoda yaamakilnthida
Makaamakathvan yaesuven raெlaam pukalnthida
கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்
நம்பாரமே எந்நாலும் நீக்கு வோனை நாடுவோம்
மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே
சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே
படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல
குடாரமாக வெய்ததேவ வேதமே வெல
எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ
முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ
ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட
அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட
மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட