கர்த்தாவே மாந்தர்
Christian Song Lyrics
TamilKarththaavae maanthar thanthaiyae,
Paethaiyor poraுppeer;
Suththaangam thaarum nenjaththae
Pakthoraaych sevai seythumae
Panninthu pottida
Nannaathar anpin alaippai
Thattamal nampiyae
Panniru seesharthaam ummai
Pinsentavannnam naangalum
Pinsellach seyveerae
Maa kalilaeyaa oyvinil
Amaithi kuntinmael,
Oyaathamaithi sthalaththil
Aa Yesu naathaa, jepaththil
Anpaaka amarntheer.
Um saantha aavi oottidum
Em ulla koshdaththil
Ulam varuththum thollaiyae
Olinthida, um saanthiyae
Ul vaalkkai oontida.
Alaikkalikkum aasaiyai
Adakkum aaviyaal
Maa kaattaு kampam akkiniyil
Aa aattaுm menmaich saththamae
Atiyaar kaetkattum.
கர்த்தாவே மாந்தர் தந்தையே,
பேதையோர் பொறுப்பீர்;
சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே
பக்தோராய்ச் சேவை செய்துமே
பணிந்து போற்றிட
நன்னாதர் அன்பின் அழைப்பை
தட்டாமல் நம்பியே
பன்னிரு சீஷர்தாம் உம்மை
பின்சென்றவண்ணம் நாங்களும்
பின்செல்லச் செய்வீரே
மா கலிலேயா ஓய்வினில்
அமைதி குன்றின்மேல்,
ஓயாதமைதி ஸ்தலத்தில்
ஆ இயேசு நாதா, ஜெபத்தில்
அன்பாக அமர்ந்தீர்.
உம் சாந்த ஆவி ஊற்றிடும்
எம் உள்ள கோஷ்டத்தில்
உளம் வருத்தும் தொல்லையே
ஒழிந்திட, உம் சாந்தியே
உள் வாழ்க்கை ஊன்றிட.
அலைக்கழிக்கும் ஆசையை
அடக்கும் ஆவியால்
மா காற்று கம்பம் அக்கினியில்
ஆ ஆற்றும் மென்மைச் சத்தமே
அடியார் கேட்கட்டும்.