பாலர் ஞாயிறிது
Christian Song Lyrics
TamilPallavi
Paalar njaayirithu, paasamaay vaarum,
Paati yaesu naamam panninthu pottaுm.
Anupallavi
Thaalanthai puthaiththidaamal thaamathamae pannnnidaamal
Njaalameethirangi vantha suvaami yaesu anpai ennnnip – paalar
Saranangal
1. Paalar sangaththaalae maatchimai pettaோm,
Paalar naesar patham panniyakkattaோm,
Paaril jothi veesukinta Parisuththa vaetham kattaோm,
Ooril engum kaart panjaangam othum paaliyar naesan kanntoom. – paalar
2. Thaeti vanthalaiyum thaesikarunndu,
Paati aarpparikka paalar paattunndu,
Kooti vanthu aananthikkak koottappanntikaiyumunndu,
Naati meetpar paatham paalar thaeda ellaa aethumunndu. – paalar
3. Intu mattum nammai aenthi vanthaarae,
Innum nithyamum paathukaappaarae,
Anpin sangam ithaikkonndu aathmanaesar seythu varum
Ennnni mutiyaa nanmaiyai aekamaaka ennnnik konndu. – paalar
பல்லவி
பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,
பாடி யேசு நாமம் பணிந்து போற்றும்.
அனுபல்லவி
தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப் – பாலர்
சரணங்கள்
1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,
பாலர் நேசர் பதம் பணியக்கற்றோம்,
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,
ஊரில் எங்கும் கார்ட் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம். – பாலர்
2. தேடி வந்தலையும் தேசிகருண்டு,
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு,
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. – பாலர்
3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்மநேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக் கொண்டு. – பாலர்