போற்றுவோமே போற்றுவோமே
Christian Song Lyrics
TamilPottaுvomae pottaுvomae
Em thaevareerai ivvaelaiyilae nantiyudanae
1. Thungan yaesuvae thooyaa umakkae thuthikal saattiduvaen
Mangaa pukalum makilnthupotti engum thuthiththiduvaen
Kangul ara engumae oli mangidaamalae thangida vaenum — pottaு
2. Aalntha settinil amilntha emmaiyae annaiththu eduththonae
Aalithanilempaava merintha annai uththamanae
Antum entum entum thuthippaen mannavanaiyae manathinilae — pottaு
3. Paavam pokkiyae kopam maattiyae rokam tholaiththonae
Thuroki ennaiyae suththikariththa thooya vaenthanae
Thooyaa naeyaa kaaya maattiyae karunnaanithiyae parikaariyae — pottaு
4. Paarilennaiyae piriththeduththonae thaavivanthonae
Akamathinilae aavi eenthida arul nirainthavanae
Tharisanam thantha thaevanae Parisuththamaay paaril jeevikka — pottaு
5. Pooranar aakavae poovil vaalnthida kirupai aliththonae
Pukalai virumpaen makilvaen thinamae makimai seluththiduvaen
Konae thaenae kothillaathonae kaanam paatiyae thuthiththiduvaen — pottaு
போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே
1. துங்கன் யேசுவே தூயா உமக்கே துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி மங்கிடாமலே தங்கிட வேணும் — போற்று
2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம்பாவ மெறிந்த அன்னை உத்தமனே
அன்றும் என்றும் என்றும் துதிப்பேன் மன்னவனையே மனதினிலே — போற்று
3. பாவம் போக்கியே கோபம் மாற்றியே ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த தூய வேந்தனே
தூயா நேயா காய மாற்றியே கருணாநிதியே பரிகாரியே — போற்று
4. பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே தாவிவந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க — போற்று
5. பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே கானம் பாடியே துதித்திடுவேன் — போற்று