எந்தன் ஆத்ம நேசரே
Christian Song Lyrics
TamilEnthan aathma naesarae
Vellam ponta thunpaththil
Thaasan thikkillaamalae
Thadumaarip pokaiyil
Thanjam thanthu Yesuvae
Thivya maarpil kaarumaen
Appaal karaiyaettiyae
Motcha veettil serumaen
2. Valla thaevareer allaal
Vaeraே thanjam intiyae
Kaividaamal naesaththaal
Aattith thaettith thaangumaen
Neerae enthan nampikkai
Neer sakaayam seykuveer
Aethumatta aelaiyaich
Settaைyaalae mooduveer
3. Kurai yaavum neekkida
Naathaa, neer sampooranar
Thikkattaோraith thaangida
Neerae maa thayaaparar
Naan asuththap paavithaan
Neerae suththar suththarae
Naan aneethi kaedullon
Neer niraintha nithyarae
4. Paavam yaavum mannikka
Aararul amaintha neer
Ennaich suththikarikka
Arul paayachcheykuveer
Jeeva oottaாm yaesuvae
Enthan thaakam theerumaen
Svaami entum ennilae
Vaalipar geethangal vaalipar geethangal
Neer suranthu ooraுmaen
எந்தன் ஆத்ம நேசரே
வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்
தஞ்சம் தந்து இயேசுவே
திவ்ய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே
மோட்ச வீட்டில் சேருமேன்
2. வல்ல தேவரீர் அல்லால்
வேறே தஞ்சம் இன்றியே
கைவிடாமல் நேசத்தால்
ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே எந்தன் நம்பிக்கை
நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையைச்
செட்டையாலே மூடுவீர்
3. குறை யாவும் நீக்கிட
நாதா, நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட
நீரே மா தயாபரர்
நான் அசுத்தப் பாவிதான்
நீரே சுத்தர் சுத்தரே
நான் அநீதி கேடுள்ளோன்
நீர் நிறைந்த நித்யரே
4. பாவம் யாவும் மன்னிக்க
ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க
அருள் பாயச்செய்குவீர்
ஜீவ ஊற்றாம் யேசுவே
எந்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமி என்றும் என்னிலே
வாலிபர் கீதங்கள் வாலிபர் கீதங்கள்
நீர் சுரந்து ஊறுமேன்